மயானத்திலும் அமைச்சர் அதிகார துஷ்பிரயோகம்.. தமிழன் பார்த்திபன் VS திமுக கவுன்சிலர்.!

சென்னை புழுதிவாக்கத்தில்  உள்ள மாநகராட்சி மயானம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என அமைச்சர் தமிழன் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், சடலத்தை எரிப்பதில் அமைச்சர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக ரவுண்டு கட்டியிருக்கிறார் மாநகர திமுக கவுன்சிலர் ஜே.கே.மணிகண்டன். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்  தமிழன் பார்த்திபன்,  சென்னை புழுதிவாக்கம் சொக்கநாதன் தெருவில் உள்ள  அவரது உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்றுள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு மேல்  அங்குள்ள எரிவாயு தகன மேடைக்கு சடலத்தை எரிக்க கொண்டு வந்தவர், தகனமேடை பகுதியில் விளக்கு இல்லை எனக் கூறி தன்னுடன் வந்தவர்களை செல்போன் லைட்டை ஒளிரவைத்து, மாநகராட்சி நிர்வாகம் சரியில்லை என அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் செல்பி வீடியோ எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், 186-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் நேரடியாக எரிவாயு தகனமேடையை ஆய்வு செய்தபோது அங்கு எல்லா விளக்குகளும் நல்லமுறையில் ஒளிர்ந்தது.இதனைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய திமுககவுன்சிலர் ஜே.கே.மணிகண்டன், அமைச்சர் தமிழன் பார்த்திபன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்.

தகனமேடையில் சடலங்களை எரிக்கு மாலை 5 மணிக்குள் உடலை கொண்டு வரவேண்டும் என மாநகராட்சி விதி இருப்பதாகவும், ஆனால் அமைச்சர் தமிழன் பார்த்திபன் 6 மணிக்குமேல் சடலத்தை எடுத்துவந்து மாநகராட்சி ஊழியர்களை மிரட்டி, உடலை எரிக்கும்படி அதிகார துஷ்பிரயோகம் செய்தாகவும் பகீர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறையில் உள்ள குறைபாடுகளை முதலில் சர்செய்யுங்கள். அதைவிட்டு இங்கே வந்து அரசியல் செய்யாதீர்கள் என திமுக கவுன்சிலர் ஆவேசம் காட்டியுள்ளார். அதேபோல் மயானம் முன்பு உள்ள அரிச்சந்திரா கல்லை எடுக்க தவெக ஆட்சியில்  மனு அளிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அந்தக் கல்லை எடுத்தால் பயங்கர விளைவுகளைச் சந்திக்க நேரும் எனவும் எச்சரித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *