எங்கே போனது ரூ.2,300 கோடி? திமுகவைச் சுற்றும் கேள்விகள்..!கோவையில் கிளம்பிய பகீர்.!

திமுக மேயர்கள் கட்டுப்பாட்டுல இருந்த, இருக்குற,  கோவை மாநகராட்சியில இரண்டாயிரத்து முன்னூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதா தணிக்கைத் துறை  அறிக்கை வெளியாகி, என்னடே ஆச்சு அந்தப் பணம்? யார் பார்த்த வேலை இதுன்னு கேள்விய எழுப்பியிருக்கு…  வாங்க என்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம்…

தமிழக அரசோட உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையோட அறிக்கை, கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2021–22 முதல் 2025–26 வரையிலான ஐந்து நிதியாண்டுகள்ல சுமார்  2 ஆயிரத்து 277 புள்ளி இரண்டு ஏழு கோடி ரூபாய் அளவுக்கு நிதி முரண்பாடுகள் மற்றும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிகாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு…
சமூக ஆர்வலர் தியாகராஜன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல பெற்ற இந்த அறிக்கையில இருந்த தகவல்கள்தான் இப்ப பகீர கெளப்பி இருக்கு…2022ஆம் ஆண்டு அரசாணைப்படி சொத்து வரி விகிதங்கள முறைப்படுத்தாததால ஆயிரத்து 194 புள்ளி 8 பூஜ்யம் கோடி,
 அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு அபராதம் மற்றும் கூடுதல் வரி விதிக்காததால 274 கோடியே 39 இலட்சம்,
வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குக் குடியிருப்புக்கான வரி விதித்ததால 87கோடியே 17 இலட்சம்,
2 லட்சத்து 77ஆயிரம்  சொத்து வரி மதிப்பீடுகள உரிய அனுமதியில்லாம தள்ளுபடி செஞ்சது மற்றும் நிலுவைத் தொகை வசூலிக்கப் படாததால், 37கோடியே 61 லட்சம்,
7ஆயிரத்து 494 வணிகக் குடிநீர் இணைப்புகளுக்கு, சாதாரண குடியிருப்பு கட்டணம் வசூலிச்சதால 158கோடியே 32 இலட்சம்,
 6ஆயிரத்து 270 வணிகக் கழிவுநீர் இணைப்புகளுக்குக், சாதாரணக் குடியிருப்பு கட்டணம் விதிச்சதால 11கோடியே 42 இலட்சம் இழப்பு ஏற்பட்டிருக்கு…
இதே மாதிரி,  குப்பைகள கையாளுதல், ஒப்பந்தப் பணிகள், வாகன எடை மேடை அமைத்தல், போலி வாகனப் பதிவு தொடர்பான முறைகேடுகள்னு திடக்கழிவு மேலாண்மையில 150 கோடியே 20 இலட்சம்,சூயஸ் (Suez) நிறுவனத்திடமிருந்து 24 மணி நேர குடிநீர் திட்டத்துல வசூலிக்கப்படாத வட்டித் தொகை 47 கோடியே 92 இலட்சம்,
எல்.இ.டி (LED) தெருவிளக்குகள், கணினி கொள்முதல் மற்றும் பராமரிப்புப் பணிகள்ல விதிமீறல்கள்னு..சுமார்  2 ஆயிரத்து 300புள்ளி கோடி ரூபாய் அளவுக்கு நிதி முரண்பாடுகள் மற்றும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கு…அதோட, தணிக்கை அறிக்கையில.  இந்த நிதி இழப்புகள் மற்றும் முறைகேடுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களூம்தான் காரணம்…
அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்… இழப்புத் தொகைய அவங்கக்கிட்டேயிருந்து மீட்டெடுக்கணும்னும் குறிப்பிட்டிருக்காங்க…
ஆனா அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் மட்டுமே இதுக்கு காரணமில்ல,திமுக மேயர்கள் தொடங்கி மாநகராட்சி உறுப்பினர்களும்தான் காரணம்னு சொல்லுறாங்க இந்த விவகாரங்கள் தெரிஞ்சவங்க…
ஏன்னா, தணிக்கைத்  துறை குறீப்பிட்டுள்ள நிதி ஆண்டுகள்ல கோவை மாநகராட்சி மேயரா இருந்தது திமுக மாமன்ற உறுப்பினர்கள்தான்.2022 – ல நடந்த உள்ளாட்சி தேர்தல்ல கோவை மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலரா வெற்றி பெற்ற திமுகவ சேர்ந்த கல்பனா,அப்போதைக்கு கோவையின் பொறுப்பு அமைச்சரா இருந்த செந்தில்பாலாஜியோட ஆசியோட, கோவையின் முதல் பெண் மேயரா  தேர்வு செய்யப்பட்டாங்க…
ஆனாலும் உள்கட்சி விவகாரம், கமிஷன், அவரது கணவரோட அதிகார துஷ்பிரயோகம், அப்பொதைய உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவோட மோதல் போக்குன்னு பல்வேறு காரணங்களால திமுக தலைமையோட நெருக்கடிக்கு கட்டுப்பட்டு 2024 ஜூலை மாதம் அவர் பதவி விலகினார்.
இதுக்குப்பிறகு திமுகவைச் சேர்ந்த ரங்கநாயகி கோவை மாநகராட்சியோட இரண்டாவது பெண் மேயரா தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போவரைக்கும் அவங்கதான் பதவியில தொடர்ந்துகிட்டு இருக்காங்க…இப்படி ரெண்டு திமுக மேயர்களோட கட்டுப்பாட்டுலதான், ரெண்டாயிரத்து முன்னூறு கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டிருக்குன்னா இவங்கள மீறி நடந்துருக்க வாய்ப்பில்லன்னு சொல்லக்கூடிய சமூக ஆர்வலர்கள் சிலர்,
நிச்சயமா  மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள்னு எல்லாமே சேர்ந்துதான் கூட்டுக் கொள்ளை அடிச்சிருப்பாங்க எனக் கூறுகின்றனர்.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த விவகாரத்தில் கூடுதலாக கவனம் செலுத்தினால், தில்லுமுல்லு பேர்வழிகள் சிக்குவார்கள் என்பதும் சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *