கள்ளக்குறிச்சி அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீதான புகார் விவகாரம். ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அரசு அதிகாரி ஒருவர் புகார் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணியாளர் நியமனம் தொடர்பாக, கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இரவு 8.32 மணியளவில் வசந்தம் கார்த்திகேயன் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக அந்தப் பெண் அதிகாரி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது குறிப்பிட்ட பெண் பணியாளரை நியமிப்பது தொடர்பாகப் பேசியபோது, தன்னிடம் மரியாதையற்ற வகையில் பேசியதுடன் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக மூன்று பேர் புகார் அளித்துள்ளதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார். ஆதாரங்கள் இருந்தால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.. மற்றொரு புறம், வசந்தம் கார்த்திகேயன் தரப்பில், அந்தப் பெண் அதிகாரி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன..

