சிம்புதேவனின் நவோரியா..! வெளியான அறிமுகப் பாடல்..!

 சிம்புதேவன் இயக்கத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நவோரியா திரைப்படத்தின் அறிமுக பாடல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விமல், ஆரி, தம்பி ராமையா, வடிவுக்கரசி, பால சரவணன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் நவோரியா. டிபிசி ட்ரீம் ஹவுஸ், சிம்புதேவன் என்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் டிச.18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அறிமுக பாடல் வெளியாகி உள்ளது. ரோகேஷ் எழுதியுள்ள இப்பாடலை தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, புருஷோத்தமன் பழனி, இமான் இணைந்து பாடியுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *