தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள பிரபலமான சின்னத்துரை நகைக்கடையில்தான் இந்தச் அதிர்ச்சி சம்பவம் அரேங்கேறியுள்ளது.காமராஜர் பிறந்த மண்ணான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண், தனது பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாகப் புதிய நகைகளை வாங்குவதற்காகக் கடைக்கு வந்துள்ளார். இவர் சிதம்பரத்தின் மனைவியும், கணவரை இழந்தவரும் ஆவார்.
பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளை வாங்கும் நோக்கத்துடன் வந்த ராஜேஸ்வரிக்கு, அங்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். நகைக்கடை ஊழியர்களுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி, கடை ஊழியர்கள் ராஜேஸ்வரியை கடுமையாகத் தாக்கியதாகப் புகாரில் எழுந்துள்ளது.
இதில் இன்னும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு என்னவென்றால், ராஜேஸ்வரி தன்னுடன் வைத்திருந்த 19 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கடை ஊழியர்கள் அபகரித்ததாகக் கூறப்படுகிறது. நகை வாங்க வந்த பெண் தாக்கப்பட்டதோடு, அவருடைய பணமும் பறிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தூத்துக்குடியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், சின்னத்துரை நகைக்கடையின் மேலாளர் சிவா, எபினேசர், மகாராஜன், முனியசாமி, ஜெகன் மற்றும் பெண் ஊழியர் ஒருவர் என மொத்தம் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஆறு பிரிவுகளின் கீழ் மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக நகைக்கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய நகைகளையும் பணத்தையும் பாதுகாப்பாக ஒப்படைத்து, நம்பிக்கையின் அடிப்படையில்தான் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒரு இடத்திலேயே பெண் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அவருடைய பணம் பறிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, காவல் நிலையத்திற்கு எதிரிலேயே அமைந்துள்ள நகைக்கடையில் இத்தகைய சம்பவம் நடந்ததாகக் கூறப்படுவது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.ராஜேஸ்வரி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா? பழைய நகையை மாற்ற வந்த பெண்ணுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே என்ன நடந்தது?
19 ஆயிரம் ரூபாய் பணம் என்ன ஆனது? இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் இந்தச் சம்பவத்தின் முழுமையான திடுக்கிடும் பின்னணி வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

