Roma michael:பிகினி உடையில் தோன்றிய பிரபல மாடல் – வெடிக்கும் சர்ச்சை!

Advertisements

பிகினி உடையில் மேடையில் தோன்றிய மாடலுக்குக் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பாகிஸ்தான், லாகூரைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி ரோமா மைக்கேல். பேஷன் துறையில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.

டெல்லி கேட், கஹே தில் ஜிதர் போன்ற படங்களிலும், பியாரி நிம்மோ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சர்வேச மிஸ் கிராண்ட்-2024 அழகிப் போட்டியில் பங்கேற்றார்.

இதில் பங்கேற்ற மாடல் அழகிகள், பிகினி உடை அணிந்து மேடையில் ரேம்ப் வாக் செய்து வந்தனர். அப்போது ரோமா மைக்கேலும் பிகினி உடை அணிந்து மேடையில் தோன்றினார்.

இதுகுறித்த வீடியோவைத் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து இதற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

உடனே அந்த வீடியோவை ரோமோ நீக்கியுள்ளார். இருப்பினும் பலர் ரோமா மைக்கேலுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *