
மிசோரமில் 48 குகைப்பாதைகள், பல்வேறு பாலங்களுடன் 51 கிலோமீட்டர் தொலைவுக்குக் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை திறப்பதற்குத் தயாராக உள்ளது.
மிரோரம் மாநிலத் தலைநகர் ஐசாலை அசாமின் சில்ச்சார் வழியாக இந்திய ரயில்வே வலையமைப்புடன் இணைக்கும் நோக்குடன் வைராவி – சாய்ரங் இடையே 51 கிலோமீட்டர் நீளத்துக்குப் புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டித் தொடக்கி வைக்கப்பட்ட பணிகள் 11 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளன. மலைகளைக் குடைந்து 48 குகைப்பாதைகள் அமைத்தும், மலைகளுக்கிடையிலான பள்ளத்தாக்கில் பல்வேறு பாலங்களைக் கட்டியும் இந்தப் பாதை முழுமையாக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடத் தயாராக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்கும், அவற்றை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கவும் இந்த ரயில்பாதை உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


