Odisha : ஜெகன்நாதர் திருவிழாவின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் தேர்த் திருவிழாவின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 25 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தில் இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்தனர். காயமடைந்தும் மயக்கமடைந்தும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு பற்றிக் கருத்துக் கூறிய ஒடிசா சட்ட அமைச்சர் பிருத்திவிராஜ் அரிச்சந்திரன், இது மிகவும் துரதிருஷ்டமானது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பூரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த்த சங்கர் சுவைனை வேறிடத்துக்கு மாற்றிவிட்டு அவருக்குப் பதில் சஞ்சல் ராணாவை நியமித்துள்ளனர்.

ஜெகன்நாதர் தேர்த் திருவிழா ஒடிசாவின் பெருமை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 25 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *