
அறந்தாங்கி அருகே பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆறுதல் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரணியானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பர்வீன்பானு.இவர் கடந்த வாரம் வயல் பகுதிக்கு மாடுதேடி சென்றபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலை குற்றவாளி கருங்குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினார்.
அப்போது குடும்பத்தினர் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் அரசு சார்பில் வீடு கட்டித் தரவும் இறந்த பர்வீன் பானு மகள்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் ஆனந்த் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன். கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



