
விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகத் தமிழக வெற்றிக் கழகம் கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்த வைஷ்ணவி. இவர் தவெகவிலிருந்து வெளியேறியதும் முதல் என்னை பற்றித் தவெகவினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை எதுவுமே வெளியிடவில்லை எனவே விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் என கூறினார். மேலும் நாங்கள் கருத்தியல் ரீதியானக் கேள்விகளைத் தவெகவினரிடம் முன்வைத்தாலும் கூட அவதூறானக் கருத்துக்கள் கூறுவதாகத் தெரிவித்தார்.


