
இந்தியாவுக்கு ஐந்து நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரோமுல்டஸ் மார்க்கோசைத் தில்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றுப் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் பெர்டினாண்ட் ரோமுல்டஸ் மார்க்கோஸ், அவர் மனைவியுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இன்று தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் முறைப்படி அரசு சார்பில் பிலிப்பைன்ஸ் அதிபருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் இராணுவ வாத்தியங்கள் முழங்க இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் தில்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், பிலிப்பைன்ஸ் அதிபரும் சந்தித்துப் பேசினர்.
பிரதமரும் பிலிப்பைன்ஸ் அதிபரும் சந்தித்து பற்றி இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், மக்களிடையே உள்ள பிணைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.


