பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

80 கோடி ரூபாய் ஊழல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வல்லி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வல்லி பல்வேறு பணிகளின் மூலம் 80 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகக் கூறினார்கள்.

24 மணிநேரமும் விற்பனை செய்யப்படும் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யவும்,வால்பாறை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் முறையாக நடைபெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை சரவணன், புதுகை ஜெயசீலன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *