11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது!

பல்லாவரம்: 

பல்லாவரத்தை அடுத்த ஜமீன் பல்லாவரம், மலங்கானந்தபுரம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் சாலமோன் (எ) முட்டைக்கண் சாலமோன் (39). லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த அவர்மீது பல காவல் நிலையங்களில் அடிதடி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையிலிருந்து வந்தன.

இந்நிலையில் போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த சாலமோன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம், சித்தூர் சென்று அங்குத் தலைமறைவாக இருந்து வந்தார். அவரைப் பல்லாவரம் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். இந்நிலையில் சாலமோன், ஆந்திராவில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீஸார் அங்குச் சென்று அவரைக் கைது செய்தனர். பல்லாவரம் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைத் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *