சுயலாபத்திற்காக அவதூறு பரப்புகிறார்கள்..!

Advertisements

ஒரு சிலர் தங்களது சுயலாபத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும்  எங்கள் நிறுவனத்தைப் பற்றி அவதூறு பரப்பியுள்ளனர் என்று தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அசோகன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் சங்க அலுகத்தில், சங்கத் தலைவர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, சங்க தலைவர் அசோகன் பேசிய போது, கடந்த 19 ஆம் தேதி பெரம்பூரில் நடைபெற்ற சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒரு சில நபர்கள் எங்கள் நிறுவனத்திற்கு எதிராகவும், அரசுக்கு கலங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் நோக்கத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து, ஒரு சிலர் தங்களது சுயலாபத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் செய்த செயல் தானே தவிர எங்கள் நிறுவனத்தில் எந்த தவறான செயலோ தவறான செலவுகளோ செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *