அதிமுகவின் மூலதனமே பொய்தான்..!

அதிமுக கொடுக்கிற வாக்குறுதிகளில் எப்போதும் பொய்யைத் தான் மூலதனமா சொல்லியுள்ளார்கள் என திமுக கல்வியாளர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், திமுக கல்வியாளர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அதிமுக கொடுக்கிற வாக்குறுதிகளில் எப்போதும் பொய்யைத் தான் மூலதனமா சொல்லியுள்ளார்கள் என்று கூறினார். 2011 இல் அதிமுக தேர்தல் அறிக்கையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை திட்டம் அமைப்போம்” என்று கூறியது போல அமைத்தார்களா  எனக் கேள்வி எழுப்பினார். இதன் பின்னர் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசியபோது, எத்தனை கூட்டணி கட்சிகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டை பொருத்தளவில் 2026-ல் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *