
தளபதி விஜய்யை தொடர்ந்து ராகவா லாரன்ஸும் அரசியலில் திடுக்கினு குதித்திருக்கிறார். அவர் வருவதற்கு முக்கிய காரணம் என்ன மக்கள் மத்தியில் ஏழைக்கு உதவ வந்த வள்ளல் அரசியலில் வந்தாலும் நம்மை மேலும் தாங்கிப் பிடிப்பார் என்றும் தன்னை போன்றே நடிகர் விஜய்வும் வந்திருப்பதும், அதற்கேற்றாற்போல் திருச்சி தொகுதியும் இவரை சற்று இவரை சற்று அரசியலை நோக்கி திரும்ப வைத்திருக்கிறது என்றே சொல்லாம்.
அவர் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அவ்வப்போது விஜயை தூக்கிவிட்ட ஊடகங்களில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அரசியலில் தொப்புனு குதிப்பது பற்றி தனது ரசிகர்களின் கருத்துக்களை காணொலி மூலம் நான் அரசியலுக்க வரலாமா அல்லது வரவேண்டாமா என்பதை என் மக்களே முடிவே செய்யட்டும் என்று தன் அரசியல் தீர்ப்பை பொதுமக்களிடமே கொடுத்துவிட்டார்.
இதனிடையில் மக்களிடம் கருத்துகள் நல்ல நல்ல முறையில் வந்து கொண்டிருக்கையில் நேற்றைய தினம் அவர் பேசிய பேச்சின் மூலம் ஊடகத்தின் வலையில் மட்டும் அல்ல ஊர் பொதுமக்கள் வாயிலும் இன்று இவரது பேச்சு இவரைப் பற்றி தாறுமாறாக பேசி கொண்டிருக்கிறார்கள்.
இதில் கேள்வி என்னவென்றால் அவர் தவெகவை விமர்சித்தரா அல்லது தமிழக பொது மக்களை விமர்சித்தார என்பது பலரிடம் விவாதப் பொருளானது. பிஸ்கட் போடுவதை திண்கின்ற நாய் நம்மலா அல்லது சுடுச்சுட பிரியாணி திங்க அழையும் பொதுமக்கள் ஆகிய நம்பலா என்றெல்லாம் பேசியதில் சில விஷயங்கள் நீங்கள் அறிந்தவைகளின் சர்ச்சைக்கு இங்கு ஒருவர் காணொலி வெளியிட்டிருக்கிறார். யார் அந்த உத்தமர் என்பதை பார்க்கலாம்
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னுடைய சப்போர்ட் லாரன்ஸ் மாஸ்டருக்கு தான் என்று சொன்ன அத்தனை பேரையும் லைட்டா மனசு வருத்தப்படும் படி இரண்டு, மூன்று வார்த்தைகளை பிரயோகித்து பேசி இருக்கீங்க. அது கொஞ்சம் மனசுக்கு சங்கடமாக உள்ளது. நாய்ங்கன்னு சொல்றீங்க.
எனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் உங்களுக்கு தெரியும். ஒரு ஆன்மீகவாதி வேற நீங்க. இப்படியெல்லாம் இருக்கக்கூடிய நீங்கள் பொதுவெளியில் இப்படியெல்லாம் பேசலாமா? மிகப்பெரிய தவறு. எப்படி நீங்க மக்களை நாய்ங்கன்னு சொல்வீங்க. இன்னும் தேர்தல் வரவில்லை. உங்களை வேட்பாளராகவும் அறிவிக்கவில்லை.
இப்போ நீங்க பயன்படுத்துற வார்த்தைகளால உங்களை நம்பி வேட்பாளராக நிற்க வைக்கக்கூடியவர்களுக்கும் பெரிய பிரச்சனையை கொடுக்கும். எனவே நமக்கும், நம்மை சேர்ந்தவர்களுக்கும், நம்மை நம்பி ஒரு விஷயத்தை கொடுக்கிறவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. இனிமேலாவது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்க என அறிவுரை கூறியுள்ளார் தாடி பாலாஜி.
மேலும் மக்களோட மக்களாக ஒன்னே ஒன்னு கேட்கிறேன். நீங்க பேசுன வார்த்தைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேப்பீங்கன்னு நம்புறேன் எனவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். மற்றொரு பக்கம் தவெகவில் இருந்திருந்தால் தாடி பாலாஜியும் தற்போது ஒரு அமைச்சர் ஆகி இருக்கலாம் என சோஷியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வரும் இந்த சூழலில் ராகவா லாரன்ஸின் அரசியல் வருகைக்கு அவர் எழுப்பிய சர்ச்சைக்கு இனி வரும் நாட்களில் அவர் முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..



