Tamil Nadu School Education Department: பள்ளிகளை சீரமைக்க 1 கோடி நிதி!

Advertisements

மிக்ஜம்’ புயல் காரணமாக சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்க பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை: வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தலைநகர் ஸ்தம்பித்து போனது. பெரும்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, வட சென்னை என பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியது.

மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். அரசு தர்ப்பில் அனைத்து நிவாரணப் பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் சேதமடைந்த பள்ளிகளை சீரமைக்க பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க 1 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *