புதுச்சேரி முதலமைச்சரின் பிறந்தநாள் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Advertisements

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தனது பிறந்தநாளை இன்று உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார். இதனைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்குத் தொலைபேசி மற்றும் சமூக வலைதளம் வாயிலாக தனது பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலனில் அசைக்க முடியாத அக்கறை கொண்ட அவரது பொதுவாழ்க்கைப் பணி மேலும் சிறக்கவும், அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *