தனி ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன் – அண்ணாமலை!

சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்ல திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பிறகு, அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “தனியாளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்… முடிந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள்” என அண்ணாமலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

“அண்ணாசாலைக்கு தனியாளாக வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்துத் தடுத்து நிறுத்திப் பாருங்கள்.

உதயநிதி கடந்த காலங்களில் தரம் இல்லாமல் பேசியுள்ளார். தரம் இல்லாமல் பேசினால், தரமில்லாமல்தான் பதில் வரும்.

காலை உணவுத் திட்டம் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பொருட்கள் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறதா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *