Theeran Adhigaaram Ondru: படப் பாணியில் அரங்கேறிய கொடூர கொள்ளை!

Advertisements

ஆண்களைக் கட்டிப்போட்டுவிட்டு பெண்களைக் கற்பழித்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

சண்டிகர்: அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல் பெண்களைத் தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்களின் கைகளைக் கட்டி, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அவர்கள் சத்தம் போடவில்லை. பின்னர் அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களையும், அவர்கள் கண்முன்னே கற்பழித்துள்ளனர். அதன்பின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்தக் கும்பல் தப்பித்து ஓடியுள்ளது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து அருகில் உள்ள மற்றொரு இடத்திலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி வசித்து வந்த வீட்டில் நுழைந்த கும்பல், கணவரைக் கடத்த முயன்றுள்ளது. அப்போது உடல்நலம் சரியில்லாத மனைவி, தனது கணவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கும்பலால் அந்தப் பெண் தாக்கப்பட்டுள்ளார். இதில் காயம் அடைந்த அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட அவரது கணவரிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் செயல்பட்டிருக்கலாமெனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு சம்பவங்களும் ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *