மத்திய பிரதேசம் மீனாட்சி நடராஜன் வழக்கில் நடந்த உண்மையான பின்னணி தகவல்.!

Advertisements

இந்தியாவில் மொத்தம் 24 மாநிலங்களவைக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு இடத்தை காங்கிரஸ் வென்றிருக்க வேண்டியது. ஆனால், வேட்புமனுவில் தகவல் மறைப்பு எனும் காரணம் கூறி காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தேர்தல் வந்தது. அம்மாநிலத்தில் மொத்தம் 230 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் சூழலில், ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 58 எம்.எல்.ஏ.க்கள் தேவை.

இதில் பாஜகவுக்கு 164 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அக்கட்சியால் எளிதாக இரண்டு இடங்களுக்கு மேல் வென்றிடமுடியும். அதேபோல் காங்கிரஸுக்கு 64 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் நிச்சயம் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை அக்கட்சியால் வென்றிட முடியும் என இருந்தது.இந்தச் சூழலில், பாஜக, தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவட் ஆகிய மூவரை வேட்பாளராக அறிவித்தது.

எதிர்தரப்பில் காங்கிரஸ் மீனாட்சி நடராஜனை வேட்பாளராக அறிவித்தது. அனைவரும் வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், குதிரை பேரத்தை தவிர்த்து தங்கள் எம்.பி. வேட்பாளரை வெற்றி பெற வைக்க தனது எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் தங்க வைத்திருந்தது.இதற்கிடையில், கடந்த 9ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

அப்போது பாஜக தரப்பில் இருந்து, காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தன் மீது தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் இருக்கும் குற்றவழக்கை மறைத்துள்ளார் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அதிகாரி அரவிந்த் சர்மா, மீனாட்சி நடராஜன் வேட்புமனுவை நிராகரித்தார்.இதற்கிடையில், கடந்த 9ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

அப்போது பாஜக தரப்பில் இருந்து, காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தன் மீது தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் இருக்கும் குற்றவழக்கை மறைத்துள்ளார் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அதிகாரி அரவிந்த் சர்மா, மீனாட்சி நடராஜன் வேட்புமனுவை நிராகரித்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸார் தேர்தல் ஆணையத்தை அணுகினர். ஆனால், அங்கு இதற்கான தீர்வு கிடைக்கவில்லை என கூறி பிறகு உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் தரப்பில் நாடினர். உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகியும், மூத்த வழக்கறிஞருமான, “மீனாட்சி நடராஜனுக்கு எதிராக சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டது; வழக்கின் மீது நீதிமன்றம் இன்னும் முறையான கவனத்தைச் செலுத்தக்கூட இல்லை.

அதற்குள்ளாகவே தேர்தல் நடத்தும் அதிகாரி அவரைத் தகுதி நீக்கம் செய்கிறார்” என முறையிட்டு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் அல்லது ஒரு வரியில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரினார்.நேற்று இந்த கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இன்று உச்சநீதிமன்றம் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது உச்சநீதிமன்றம், தேர்தல் அதிகாரியின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை; எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *