
திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் .
ஓ.பி.எஸ்-ன் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட இவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், பாஜகவின் கிளை கழகமாக அதிமுக செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். அப்போது தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார்.
அதன்படி இன்று மாலை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த மனோஜ் பாண்டியன், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.



