“அன்புமணி என்னை கொல்லச் சொல்லியுள்ளார்..” – MLA அருள் பரபரப்பு பேட்டி.!

Advertisements

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய பாமக செயலாளர் சத்யராஜ் என்பவரின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.

அதன்பின் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சேலம் நோக்கி புறப்பட்டார். சிறிது தூரத்தில் அவர்களின் காரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கார்களின் மீது கற்களை வீசியதுடன், கட்டைகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.அப்போது எம்.எல்.ஏ. அருள் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது ஆதரவாளர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின் சேலம் வந்த எம்.எல்.ஏ. அருள் இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அருள் மீதான தாக்குதலுக்கு உட்கட்சி பூசல் காரணமா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *