Rahul Gandhi:தன்னை வைத்து அரசியல் செய்த பாஜவுக்கு ராமர் பாடம் கற்பித்துள்ளார்.!

Advertisements

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைமீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க எனத் தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார்.
இதற்கிடையே, மக்களவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மோடி.. மோடியென முழக்கமிட்டனர்.
சிவபெருமானின் படத்தைக் காட்டி தன்னுடைய உரையைத் தொடங்குவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசினார்.

அப்போது, அவையில் சிவபெருமானின் படத்தைக் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதா ? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பனார். அப்போது, சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பது அவை விதியெனச் சபாநாயகர் தெரிவித்தார்.

பின்னர் மேற்கொண்டு அவர் கூறியதாவது:-நான் காட்டிய சித்திரத்தில் நாங்கள் பாதுகாத்த சில சிந்தனைகள் உள்ளன.கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா என்ற சிந்தனைமீது, அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நான் உள்பட எதிர்க்கட்சியினர் பலரும் குறிப்பிட்டு தாக்கப்பட்டனர்.எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

என்மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள், இரண்டு ஆண்டு சிறை தண்டனை போடப்பட்டது. என்னிடம் 55 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. எதற்கும் அஞ்சாமல் கல்லைப் போல அமர்ந்திருந்ததாக விசரணை அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.என்னுடைய வீடு என்னிடமிருந்து பறிக்கப்பட்டது, அதுகுறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

மற்ற உயிரினங்கள்போல நாங்களும் பிறப்போம், இறப்போம். ஆனால், பிரதமர் மோடி பயாலஜிக்கலாகப் பிறக்காதவர்.காந்தி இறக்கவில்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல. நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றித் தான் பேசுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *