
உக்ரைனின் மேற்குப் பகுதி நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை ஏவித் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமையன்று உக்ரைனின் மேற்குப் பகுதியில் ரோமேனிய எல்லையில் உள்ள செர்னிவ்ட்சி நகரின் மீது ரஷ்ய ராணுவத்தினர் நூற்றுக்கணக்கான டிரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஷ்யா 597 டிரோன்களையும், 26 ஏவுகணைகளையும் ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 20 பேர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கார்க்கிவ், சுமி, லிவிவ், லுட்ஸ்க் ஆகிய நகரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்களின் குடியிருப்புகளும் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ரஷ்யா ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளில் பலவற்றை இடைமறித்துத் தாக்கி அழித்ததாகவும் செலன்ஸ்கி குறிப்பிட்டார்.


