Manjummel Boys: கவுதம் மேனன் படத்துக்கே தண்ணிகாட்டிய மஞ்சுமெல் பாய்ஸ்!

Advertisements

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ஜோசுவா படத்தின் முதல் நாள் வசூலை விட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிக வசூலை வாரிக்குவித்து உள்ளது.

தமிழ் படங்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே சொதப்பி வருகின்றன. பிளாக்பஸ்டர் ஹிட் எனச் சொல்லும் அளவுக்கு இதுவரை இந்த ஆண்டு ஒரு தமிழ் படம் கூட வரவேற்பை பெறவில்லை. இத்தனைக்கும் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினியின் லால் சலாம், ஜெயம் ரவியின் சைரன் எனப் பெரிய நடிகர்களின் படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆனாலும் அப்படங்கள் கலவையான விமர்சனங்களையே சந்தித்தன.

இதனால் கோலிவுட்டே தற்போது பரிதாப நிலையில் உள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் மக்கள் தியேட்டருக்கு வரவைப்பதற்காக, பழைய படங்களைப் போட்டி போட்டு ரீ-ரிலீஸ் செய்யத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில் விஜய்யின் திருமலை, அஜித் நடித்த வாலி, ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி, விஜய் சேதுபதியின் 96, சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, தனுஷின் யாரடி நீ மோகினி போன்ற கிளாசிக் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றன.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மலையாள படம் ஒன்று தமிழ்நாட்டில் மாஸ் ஹிட் அடித்துள்ளது. புதுப்படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், மலையாளத்தில் அண்மையில் வெளிவந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மாஸ் வரவேற்பு கிடைத்து வருகிறது. கேரளாவை மிஞ்சும் வகையில் தமிழ்நாட்டில் இப்படத்தின் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது மஞ்சுமெல் பாய்ஸ்.

அந்த வகையில் இரண்டாம் வாரமாக வெற்றிநடைபோட்டு வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மார்ச் 1-ந் தேதி வெள்ளிக்கிழமையான நேற்று தமிழகத்தில் மட்டும் ரூ.1.01 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இத்தனைக்கு இப்படத்துக்கு போட்டியாக நேற்று கவுதம் மேனன் இயக்கிய ஜோசுவா திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் முதல் நாளில் வெறும் ரூ.90 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்தது. அதைவிட அதிகம் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது மஞ்சுமெல் பாய்ஸ். இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 கோடி வசூலித்து உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *