Maha Shivaratri Festival 2024: அழுது மனமுருக தியானம் செய்த நடிகர் சந்தானம்!

Advertisements

பிரபல நடிகர் சந்தானம், ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில், மனம் உருகி அழுது தியானம் மேற்கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி விழா, சிவபத்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், சிவபக்தர்கள் இரவு முழுவதும் கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ கண் விழித்துச் சிவபெருமானை வழிபடுவது வழக்கம். மேலும் கோயில்கள் சிவ ராத்திரி அன்று நடை சாத்தப்படாமல் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

அந்த வகையில் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில், சற்குரு தலைமையில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள், அரசியல்வாதிகள், விஐபிகள், வி விஐபிகள், பொதுமக்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திரிபுரா ஆளுநர் இந்திரா சேனா ரெட்டி, தமிழக இணை அமைச்சர் எல்.முருகன், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

ஷங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி நடத்த, இதில் நடிகை தமன்னா, நடிகர் சந்தானம் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிவனை மனம் உருகி வேண்டிக்கொண்டனர். அந்த வகையில் பிரம்ம முகுர்த்தத்தில் நடந்த தியானத்தில், நடிகர் சந்தானம் மனம் உருகி கண்ணீர் விட்டு வேண்டுகொண்டார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, கோவில் அடிமை தனத்தை நிறுத்த வேண்டும் எனக் கூறி, கடந்த 2021 -ஆம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு சற்குரு கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதே போல், இதுகுறித்து சந்தானம் எடுத்த பேட்டியில் சற்குரு கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. சற்குருவை தீவிரமாகப் பின் பற்றி வரும் சந்தானம் மஹா சிவராத்திரி நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *