T. Velmurugan: ஒரு தொகுதி வேண்டும்!

Advertisements

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி வழங்க வேண்டும் எனக் குழுவிடம் கேட்டிருக்கிறோம் ; தமிழக முதல்வருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று நல்ல பதிலைத் தருகிறோம் எனத் தொகுதி பங்கிட்டுக் குழு தெரிவித்திருக்கிறது எனத் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்”தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக  தொகுதி பங்கீட்டு குழு மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடையேயான   பேச்சுவார்த்யை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

திமுக தலைமையிலான மாபெரும் வெற்றி கூட்டணியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் என மூன்று தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி கூட்டணியாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பயணித்து வந்திருக்கிறது.

அந்த வகையில் நடைபெற இருக்கிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கித் தர வேண்டும் என்ற வேண்டுகோளையும் அதற்கான நியாயமான காரணங்களையும்  திமுக நாடாளுமன்ற தேர்தல் பங்கீட்டு குழுவிடம் வைத்திருக்கிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் மூன்று தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களுக்குச் சென்று பிரச்சார பீரங்கியாக இருந்து இந்த மாபெரும் வெற்றி கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன். அந்த வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக சட்டமன்றத்தில் எப்படி தமிழ்நாட்டில் மக்களின் குரலாக ஒலிக்கிறதோ நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் எனது கட்சி  தீர்மானத்தையும் திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி வழங்க வேண்டும் எனக் குழுவிடம் கேட்டிருக்கிறோம். தமிழக முதல்வருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று நல்ல பதிலைத் தருகிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குரல் ஒளிபதற்கான வேண்டுகோளுடன் தேர்தல் பேச்சு வார்த்தை குழுவிடம் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற மிக முக்கியமான வேண்டுகோளை முன் வைத்திருக்கிறேன்.

கடந்த அதிமுக ஆட்சியில் சரி கலைஞர் ஆட்சியிலும் சரி ஸ்டாலின் ஆட்சியிலும் சரி சட்டமன்றத்தில் என்னால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. *கட்சியின் சார்பாகச் செல்லுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையையும் பாஜக பாசிச அரசால் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதையும் தமிழ் சமூகத்தின் உரிமை தொடர்ந்து பறிக்கப்படுவது குறித்தும் ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்  என்பதை ஈடேற்றுவதற்காக ஒரு வாய்ப்பைத் தர வேண்டும் எனத் திமுக தலைமை இடம் முன் வைத்திருக்கிறேன்*.

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குத் தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்பு இருக்கிறது.  பாண்டிச்சேரி உட்பட  40 தொகுதிகளில் எங்குக் கொடுத்தாலும் தேர்தலைச் சந்திப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தயாராக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *