வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பம்..!

தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே அரசியல் கட்சியினரும் சுயேச்சைகளும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஏப்ரல் ஆறாம் நாள் ஆகும். இதற்கிடையில் அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை ஆகியன விடுமுறை என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் இன்றே ஆர்வத்துடன் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியில் உள்ளன. நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *