
Al மற்றும் Deepfake தொழில்நுட்பங்களின் அபாயம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். AI, Deepfake தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் மக்கள் பலரும் அதனை நம்பிவிடுகிறார்கள்.

இது நல்லதல்ல, இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். நான் கர்பா நடனம் ஆடுவதை போல போலி வீடியோக்களை நானே பார்த்து அதிர்ச்சி ஆனேன். இந்த போக்கு சமூகத்தில் மிகப்பெரிய சவாலை உருவாக்கும். மக்களுக்கு AI, Deepfake குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.



