Malaiyur Mariyamman Temple: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு!

அந்தியூர் அருகே மலையூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டிக் கோவில் பூசாரி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி காலணி பகுதியில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான மலையூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா ஆண்டு வரும் மாசி மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாகப் பூச்சாற்றுதலுடன் தொடங்கி கம்பம் நடுதல் மற்றும் முப்போடு வைத்தல் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் பண்டிகை இன்று நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையின்போது அம்மன் அழைத்து வரும்போது கோவில் பூசாரி கோவிலைச் சுற்றி வரும்போது தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது., இதற்காகப் பக்தர்கள் நேர்த்திக் கடனாகத் தேங்காயை கோவிலுக்கு வாங்கி கொடுத்து 15 நாட்கள் விரதம் இருந்து கோவிலில் சுற்றி வரும்போது வரிசையாக நின்று பின்னர் கோவில் பூசாரி அவர்களது தலையில் தேங்காய் உடைக்கப்படுவது ஐதீகமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த வேண்டுதல் வைப்பதனால் தாங்கள் நினைத்த காரியம் ஒரு வருடத்திற்குள் நிறைவேறுவதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்., அதேபோல் குழந்தைகளைச் சூறையிடும் வினோத வழிபாடும் நடைபெற்றது., இதன் காரணமாகக் குழந்தைகள் நலுக்கம் மற்றும் உடல்நல குறைவு ஏற்படுவது உள்ளிட்டவைகள் நடக்காமல் இருக்கும் என்ற ஐதீகமும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகப் பக்தர்கள் தெரிவித்தனர்., நடைபெற்ற திருவிழாவில் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிற்ப அலங்காரத்தில் காட்சி அளித்த மழையூர் மாரியம்மனை தரிசித்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *