Chennimalai issue: கிறிஸ்துவ முன்னணி தலைவர் கைது!

Advertisements

சென்னிமலை விவகாரம்! கிறிஸ்துவ முன்னணி தலைவர் கைது.

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள மலையைக் கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி கத்தக்கொடிக்காட்டில் ஜான் பீட்டர் என்பவர் வீட்டில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது. கடந்த செப்.,17ம் தேதி ஜெபக்கூட்டம் வழக்கம்போல நடந்த நிலையில் ஹிந்து முண்னணி அமைப்பினர் சென்று குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினர்.

அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கிறிஸ்தவர்கள் புகாரின்படி ஹிந்து அமைப்பினர் மீது சென்னிமலை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இருவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.

இந்நிலையில் 26ம் தேதி சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் கந்த சஷ்டி அரங்கேற்றத் தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோயில் மலையைக் கல்வாரி மலையாக எனும் கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் பேசினார். இதனால் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்தும் கிறிஸ்தவ முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன் ஹிந்து முன்னணியினர் சென்னிமலை ஆண்டவர் குழு ஊர்மக்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் சென்னிமலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் தலைவர் சரவணன் ஜோசப் செங்கல்பட்டில் இன்று கைது செய்யப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *