
லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்காவுடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் வெறியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிறுத்தம் என்பது, லெபனான் உள்பட அனைத்து முனைகளுக்குமான போர் நிறுத்தமாகும் என்று தெரிவித்தார்.
இதில், ஒரு முனையில் நடக்கும் போர் மீறல், அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை மீறுவதாகக் கூறினார். எனவே, எந்தவொரு போர் மீறலின் விளைவுக்கும் அமரிக்காவும் இஸ்ரேலுமே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்தார்.



