உணவுக்காக வரிசையில் நின்ற காசா மக்களைக் கொன்ற இஸ்ரேல்..!

உணவையும் உதவிப் பொருட்களையும் பெறுவதற்காக வரிசையில் நின்ற காசா மக்களைக் கொன்ற இஸ்ரேலுக்கு பிரிட்டனும், மேலும் 27 நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாலஸ்தீனத்தில் உணவுக்காகக் காசா நகரில் வரிசையில் நின்ற பொதுமக்களில் 800 பேர் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் நலவாழ்வு அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பட்டினியால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் மற்றும் 27 நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் உணவுக்காக வரிசையில் நின்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றது மனிதநேயமற்ற செயல் எனக் கூறி அதைக் கண்டித்துள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.

காசா மீதான போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *