Sweet Corn Fried Rice: ஸ்வீட் கார்ன்வெரைட்டி ரைஸ்!

Advertisements

மழை விடாது பெய்து வருகிறது. பள்ளிகளுக்கு  வேறு விடுமுறை விடுகிறார்கள். சுடச்சுட பிள்ளைகள் சாப்பிட அம்மாவை தொந்தரவு செய்வார்கள். அப்படி விரும்பி சாப்பிடுவதில் நாம் வெரைட்டி ரைஸ் ஸ்வீட் கார்ன் ரைஸ் சாப்பிடலாம். சரி எப்படி செய்வது?

செய்முறை:

பாசுமதி ரைஸ்- 1/2 கிலோ
வெங்காயம்- 4
தக்காளி-4
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய்-5

 

புதினா- ஒரு கைப்பிடி
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
எண்ணெய்- 50 கிராம்
சீரகம்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
ஸ்வீட் கார்ன் -1
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்

 

செய்முறை:

முதலில் ஸ்வீட்கார்னை வேகவைத்து முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவேண்டும். பிறகு குக்கரில் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக பொறிந்தவுடன் சீரகம், புதினா,பச்சை மிளகாய் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து நன்கு  வதக்க வேண்டும்.  வெட்டிவைத்த வெங்காயத்தை சேர்த்து , பிறகு 2 நிமிடங்களுக்குப் பிறகு தக்காளி சேர்த்து நன்கு கிளறி விடவும். பிறகு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்.

பிறகு கழுவி வைத்த அரிசியை சேர்த்து பின் உதிர்த்து வைத்திருந்த சோள முத்துக்களையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் குக்கர் மூடி போட்டு விசில் வைக்கவும். இரண்டு விசில் வந்தால் போதுமானது.பிறகு குக்கர் மூடியை திறந்து லேசாக சாதம் உடையாதவாறு கிளறி விடவும். சுடச்சுட பரிமாறலாம். உருளைக்கிழங்கு வறுவல், இதற்கு ஏற்ற சைடு டிஷ். ஸ்வீட்கார்ன் ரைஸ் ரெடி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *