இந்தியாவுக்கு மியான்மர் ஏன் முக்கியம்? பிரதமரின் ராஜதந்திர விளக்கம்..!

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம், கிழக்கு நோக்கிய செயல்பாடு’ மற்றும் ‘இந்தோ-பசிபிக்’ ஆகிய கொள்கைகளுக்கு மியான்மர் மிக முக்கியமான நாடாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங்குடன் ஒரு பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்காக அவர் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளதை இந்திய மக்கள் பெரும் கௌரவமாகக் கருதுகிறோம் என்று கூறினார்.

புத்த பெருமானின் ஆசிகளுடன் அவர் தனது பயணத்தைப் போத்கயாவிலிருந்து தொடங்கியுள்ளார் என்பது சம அளவில் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். இந்தியா – மியான்மர் இடையேயான ஒட்டுமொத்த உறவுகள் குறித்தும் நாங்கள் ஆய்வு செய்ததாகக் கூறினார்.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்,’ கிழக்கு நோக்கிய செயல்பாடு’ மற்றும் ‘இந்தோ-பசிபிக்’ ஆகிய கொள்கைகளுக்கு மியான்மர் மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *