Advertisements

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், புனே மாவட்டத்தில் 48 பேருக்கும், மும்பை நகரில் 34 பேருக்கும் மற்றும் தானேவில் 6 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
இதனால், மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,162 ஆக உயர்ந்து உள்ளது என மராட்டிய சுகாதார துறை தெரிவித்து உள்ளது. மொத்தம் 14,565 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
இதில் 597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் கூடிய இணை நோய் காரணமாக இவர்கள் இறந்துள்ளனர்.
தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் சமூக இடைவேளி விடவும் முககவசம் அணியவும் அஅறிவுறுத்தப்பப் பட்டுள்ளது.
Advertisements




