Advertisements

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நடைபெறலாம் என்ற தகவல் வெளியே கசிந்ததை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வருகிற சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய போட்டிக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
வருகிற சட்டமன்றத் தேர்தலில் புதிதாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் போட்டியிடுகிறது . தமிழக அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் திமுக, அதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளும் நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக்கழகமும் சேர்ந்து நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியா முழுவதும் ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக டெல்லி தேர்தல் கமிஷன் தீவிர ஆய்வுகளை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேர்தல் கமிஷன் இருமுறை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறது .
ஐந்து மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலையில் முதல் கட்டமாகவே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது .
தமிழ்நாடு சட்டசபையை பொறுத்தவரையில் வருகிற மே மாத பத்தாம் தேதியுடன் தற்போதைய ஆட்சி காலம் முடிவடைகிறது. இதன் பின்னர் ஆட்சிக்கட்டிலில் யார் அமரப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அந்த வகையில் , வருகிற 20 ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குரிய தேதியை அறிவிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது . வருகிற ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிய வந்திருக்கிறது .
இது தொடர்பாக , டெல்லி பாஜக மேல் இடத்திற்கு முக்கிய தகவல் கசிந்து இருக்கிறது அதன் அடிப்படையில் சென்னையில் முகாமிட்டிருந்த பாஜக அமைப்புச் செயலாளர் சந்தோஷ் கட்சி நிர்வாகிகளை அழைத்து வருகிற ஏப்ரல் மாதம் 13 அல்லது 14 ஆம் தேதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என தகவல் கூறி இருக்கிறார் என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் மார்ச் மாதம் முழுவதும் வேட்பாளர்கள் அறிவிப்பு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் என வருகிற மார்ச் மாதமே தமிழக அரசியல் பரபரக்கத் தொடங்கிவிடும் .வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் தேர்தல் முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் தான் அறிவிக்கப்படும்.
காரணம் ஐந்து மாநிலங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெறுவதால் அனைத்து மாநில தேர்தல்களும் நடைபெற்று முடிந்த பிறகு தான் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் முக்கிய செய்தி ஆகும்.
Advertisements


