முட்டாள்தனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஓர் எல்லை உண்டு – விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

முட்டாள்தனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஓர் எல்லை உண்டு என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக டிரம்ப் அடிக்கடி கூறிவருகிறார். இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இருப்பினும், எதிர்கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பு வருகின்றனர். அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தார். இதை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் போபாலில், நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து அழைப்பு வந்ததும், பிரதமர் மோடி சரணடைந்து விட்டார்’ என பேசியுள்ளார்.

இதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சத் கிரண் ரிஜிஜு ”முட்டாள்தனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஓர் எல்லை உண்டு என்று ராகுல் காந்தியை குறிபிட்டு பேசினார்.

மேலும் எதிர்க்கட்சி என்பது, நாட்டை எதிர்ப்பதற்கு அல்ல என்பதை ராகுலிடம் யாரும் சொல்ல வில்லையா என கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *