Thiruparankundram : தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு..!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் போடப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்றே தீபத்தை ஏற்றிவிட்டு நாளை உத்தரவை நிறைவேற்றியதற்கான, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, நீதிமன்றத் தீர்ப்பிற்கு, சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பா வரவேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *