
வைகை அணையிலிருந்து 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், வைகை அணையிலிருந்து, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும், கிருதுமால் உப வடிநிலத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும். சிறப்பு நிகழ்வாக, வைகை அணையிலிருந்து, 5-ஆம் தேதியிலிருந்து, 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கனஅடி வீதம் மொத்தம் 450 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



