அமித்ஷாவிடம் ஓபிஎஸ் என்ன பேசினார்: 10ம் தேதி விடை தெரியும்.!

Advertisements

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சியில் தனக்குரிய மரியாதை தரப்படவில்லை என குற்றம் சாட்டி அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தனி கட்சி ஒன்றை தொடங்கி அதன் மூலம் திமுகவில் இணையலாம் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

ஓ பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில் அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் ஒருங்கிணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தான் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனைகள் நடத்தி சில முக்கிய முடிவுகள் எடுத்து வைத்திருக்கிறார்.

அவரைப் பொறுத்த வரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரக்கூடிய பத்தாம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது.  இந்த பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது முடிவு எடுக்கிறாரா அப்படி முடிவு எடுக்கப்படாவிட்டால் டிசம்பர் 15 ஆம் தேதி தனி அரசியல் கட்சியை தொடங்குவது என முடிவு செய்து வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார் . அப்பொழுது வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற வேண்டுமானால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் . அதிமுகவை ஒருங்கிணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பேசினார் .

அவர் மேலும் பேசும்போது தன்னை அதிமுகவில் மீண்டும் சேர்க்காவிட்டால் டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு தனி கட்சி தொடங்கப் போவதாகவும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். இதனை மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த அமித்ஷா வருகிற பத்தாம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதற்கு பிறகு நான் சென்னை வருகிறேன் . அப்பொழுது இதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று பதில் சொல்லி அனுப்பி இருக்கிறார்.இதனை தொடர்ந்து சென்னை திரும்பிய ஓ. பன்னீர்செல்வத்திடம் டெல்லி பயணம் குறித்து கேட்டபோது மரியாதை நிமித்தமாக சென்று வந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தை பொருத்தவரையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி வருகிறார் . அந்த வகையில் ஓ பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு தரப்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் பார்க்கப்படுகிறது. எனவே டிசம்பர் 15ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவதுடன் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என்பது தான் இறுதி கட்ட தகவலாக தெரிய வந்திருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *