Advertisements

தமிழக அரசியல் நிலவரத்தைக் கண்டு கோபத்தின் உச்சத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக நைனார் நாகேந்திரனை டெல்லிக்கு வரும்படி அழைத்திருக்கிறார். நைனார் நாகேந்திரனும் மின்னல் வேகத்தில் டெல்லி சென்று இருக்கிறார். அடுத்த கட்டமாக தமிழக பாஜகவில் அதிரடி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிய வருகிறது .
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தை பொறுத்தவரையில் இப்பொழுதே களை கட்டி நிற்கிறது. திமுக அதிமுக பாஜக தவெக தேமுதிக மதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் விடுதலைச் சிறுத்தைகள் என ஒட்டுமொத்த கட்சிகளும் தங்களது தேர்தல் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரையில் நடிகர் விஜய் கட்சியில் செங்கோட்டையன் இணைவது வரை அனைத்து தகவல்களும் அன்றாடம் டெல்லிக்கு பறந்தபடி இருக்கின்றன . டெல்லி பாஜக மேல் இடத்தை பொருத்தவரையில் பீகார் தேர்தல் முடியட்டும். அடுத்த கட்டமாக தமிழ்நாடு தேர்தல் குறித்து களத்தில் இறங்கலாம் என்று முடிவெடுத்து வைத்திருந்தார்கள் .
அந்த வகையில் தற்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகத்து ஆட்டம் ஆரம்பமாக போகிறது . அமைச்சர் அமித்ஷா கையில் எடுத்த காரியத்தை விட மாட்டார் வெற்றி பெற்று காட்டுவார் என அரசியல் ரீதியாக பேசுவார்கள். அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனம் இனி தமிழகத்தின் மீதுதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவரான நைனார் நாகேந்திரனை உடனடியாக டெல்லிக்கு வரும்படி அழைத்திருக்கிறார் அவரும் அதிரடியாக டெல்லிக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார் அவருடன் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பஜெயந்த் பாண்டாவும் சென்றிருக்கிறார்.
நைனார்ரேந்திரனைப் பொறுத்தவரையில் அவரது பணிகள் சிறப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதன் நிமித்தமாக அவருக்கு விளக்கம் தருவதற்காக தான் அமித்சா அழைத்ததாக சொல்லப்படுகிறது .
இதற்கிடையே பைஜெயந்த் பாண்டா ஏற்பாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி இணைவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாக தெரிகிறது . எனவே தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக பாமக இணையும் என தெரிகிறது. இது தவிர தேமுதிகவையும் இணைக்க வேண்டும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக இருக்கிறார் .
மேலும் தமிழகத் தேர்தல் களத்தில் பூத் கமிட்டிகள் பலமாக இல்லை என்ற உளவுத்துறை செய்தியும் அமித்ஷாவுக்கு சென்றடைந்து இருக்கிறது. எனவே பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கிடையே முக்கிய செய்தியாக பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலையும் டெல்லி தலைமை முடிவு செய்ய தயாராகி வருகிறது .
ஏற்கனவே தமிழகத்திலிருந்து யார் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்ற பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டு விட்டது தற்போது அதன் மீதான பரிசீலணையும் தொடங்கி இருக்கிறது என்பது முக்கிய செய்தியாகும் . ஏற்கனவே பிரதமர் மோடி கோவை வந்த நிலையில் , அடுத்த மாதம் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகிறார் அப்பொழுது கூட்டணி பற்றிய அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என தெரிகிறது.
Advertisements




