மதுரையில் புதிய மத்தியச் சிறைச்சாலை அமைக்க பணிகள் தொடக்கம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள, புதிய மத்தியச் சிறைச்சாலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

மதுரை அரசரடியில் செயல்பட்டு வரும் மத்தியச் சிறைச்சாலையில், கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதிய  இட வசதி இல்லை. இதனால் சிறைச்சாலையை வேறு இடத்திற்கு இடமாற்றிக் செய்து, கூடுதல் வசதியுடன் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில், மேலூர் அருகே செம்பூரில், 89 ஏக்கர் பரப்பளவில், புதிய  மத்தியச் சிறைச்சாலை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. 336 கோடி மதிப்பீட்டில், புதிய மத்தியச் சிறைச்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழாவில், மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன், மதுரை சிறைத்துறைத் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *