தனியார் பள்ளிகளில் படிப்பது பெருமையா..?

Advertisements

கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் எனச் சென்னையில் உள்ள பெற்றோர்கள் நினைப்பதாகப் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் சென்னை மாவட்டத் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் கற்பித்தல் நடைமுறைகள் குறித்து விளக்கினர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிற மாவட்டங்களை விட அதிகமான தனியார் பள்ளிகள் சென்னையில் தான் உள்ளதாகவும், கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என, சென்னையில் உள்ள பெற்றோர்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார். தனியார் பள்ளிக்குச் சென்றது போக, மீதம் இருக்கும் மாணவர்கள்தான், அரசு பள்ளிகளைத் தேடி வருவதாகத் தெரிவித்தார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *