ஜஸ்டின் ட்ரூடோ வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை!

Advertisements

ஒட்டாவா:

கனடா பிரதமர் ஆக இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. எதிர்ப்பு காரணமாகக் கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்த அவர், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிப்பேன் எனத் தெரிவித்திருந்தார். கட்சி விதிப்படி, தலைவராக இருப்பவரே பிரதமர் ஆகப் பதவி ஏற்க முடியும்.

இதையடுத்து, புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது,

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லையென முடிவு எடுத்துள்ளேன். அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அடுத்து என்ன செய்வது என முடிவு செய்யவில்லை.

அதற்கு நேரமும் இல்லை. தற்போது கனடா மக்கள் அளித்த பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *