சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.120 குறைந்தும் நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்தும் விற்பனையானது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 57,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதனிடையே, ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகளுக்கும் இன்று விடுமுறை என்று மெட்ரோஸ் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.