Khalistan movement: சொத்துக்கள் பறிமுதல்!

Advertisements

காலிஸ்தான் பயங்கரவாதிகள் பட்டியல் தயார்! பயங்கரவாதிகள் சொத்துக்கள் பறிமுதல் …

நம் நாட்டில் நாச வேலைகளில் ஈடுபடும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை வேரோடு அகற்றும் பொருட்டு, காலிஸ்தான் பயங்கரவாதிகள் பட்டியல்  சேகரிக்கப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளது. வெளி நாடுகளில் இருந்தபடி, நம் நாட்டில் நாச வேலைகளில் ஈடுபடும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள், 19 பேரின் சொத்துக்களை யு.ஏ. பி. ஏ. சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய என்.ஐ.ஏ. நடவடிக்கை எடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்துக் காலிஸ்தான் எனும் தனி நாடாக அறிவிக்கக் கோரி, காலிஸ்தான் ஆதரவாளர்கள்  பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும் போராடியும் வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பல்வேறு பிரிவினைவாத குழுக்கள் வன்முறை சம்பவங்களை நிகழ்த்திப் பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை அரசுக்கு எதிராக  எடுத்து வருகின்றனர்.

இந்த அமைப்புக் குழு ஒன்றை உருவாக்கி இந்தியா மட்டுமல்ல வெளி நாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக இந்த அமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்குக் குடியுரிமை  பெற்றுக்  கொண்டு, இந்தியாவில் மறைமுகமாகப் பிரிவினைக்குத் தூண்டுவதோடு நாச வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

இது போன்ற பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாக வட அமெரிக்க நாடான கனடா ஆதரவும், உதவிகளையும் செய்து வருகிறது. காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் எனும் அமைப்பின் தலைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்ஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் அடையாளம்  தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் இந்தியாவை சம்மந்தப்படுத்தி, இந்திய ஏஜெண்டுகளின் தொடர்பு உள்ளது எனக் குற்றம் சுமத்தினார், கனட பிரதமர் ஜஸ்டீன் ட்ருட்டோ, இதனால் இந்தியாவுக்கும் ,கனடாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு நாடுகளும் அவரவர் வெளி நாடு தூதர்களை வெளியேற்றினர். இந்நிலையில் மற்றொரு பயங்கரவாதி  சுக்னே துங் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் பழியும் இந்தியாவின் மேல் விழுந்தது.

இதன் எதிரொலியாகக் கனடாவில் வசித்து வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுல் என்பவருக்குச் சொந்தமான வீடு, நிலம் ஆகியவற்றை முடக்கியது.அது மட்டுமல்ல இவர் நத்தி வரும் `சீக்ஸ் ஃபார் ஜஸ்டீஸ்” என்ற அமைப்பு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இவர்மீது 3 தேச துரொக வழக்குகள் உட்பட 22 குற்ற வழக்குகள் உள்ளன.

கனடாவில் வாழும் இந்தியர்களை இவர் நாட்டை விட்டு வெளியேறும் படி  மிராட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் பிரிட்டன், அமெரிக்கா, பாகிஸ்தான், போன்ற நாடுகளில் பதுங்கியபடி இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத குழுத் தலைவர்கள், 19 பேரின் பட்டியலைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தயார் செய்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு  அவர்கள்மீது தேசத் துரோக வழக்கும் பதிவும் செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *