தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
ஃபெஞ்சல் புயல் மாலை கரையை கடக்கும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தேன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் நிலவரம்குறித்து கேட்டறிந்தேன்.
மழை முன் எச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கனமழையால் எந்த மாவட்டத்தில் இருந்தும் ஆபத்தான செய்திகள் வரவில்லை. கடந்த முறை மழைநீர் தேங்கிய இடங்களில் இம்முறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழைநீர் தேங்கவில்லை.
இன்று இரவு கடுமையான மழை பெய்யும் என்பதால் மீட்பு, நிவாரண பணிகளுக்குத் தயாராக உள்ளோம். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார். எனக்கூறப்படும் நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகுறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்தார்.மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டபின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.