
பீகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 122 இடங்களுக்கு வருகின்ற 11 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சதீஷ் குமார் களமிறங்கி உள்ளார்.
இதே, போல் பல்வேறு தொகுதிகளில், பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் ஆயிரத்து 500 கம்பெனி துணை ராணுவப்படையினர் உட்பட மொத்தம் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


